
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றியதால் மகிழ்ச்சியில் தான் உள்ளது என்றே சொல்லலாம். இந்த நிலையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், நான் சாதாரண மனிதன்.
மோடியைப் போல் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவர் அல்ல. துரதிஷ்டவசமாக பிரதமர் மோடியை போல் நான் கடவுளால் வழிகாட்டப்படுபவன் அல்ல. ரபேலியன் எம்பியாக தொடர்வதா? அல்லது வயநாட்டின் எம்பியாக தொடர்வதா? என்று மக்களை கேட்டு முடிவு செய்வேன் .எந்த தொகுதி எம்பி யாக தொடங்குவது என்பதை முடிவு செய்ய தர்ம சங்கடமாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.