
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த ரயில்வே விதியில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதற்கெல்லாம் அதனை பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மருத்துவ உதவி தேவைப்படும்போது, பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழும்போது, விபத்தை தவிர்ப்பதற்கு, ரயிலில் பயணிக்கும் குழந்தை, வயதானவர், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை துணையை காணவில்லை என்றால் அபாய சங்கலியை இழுத்து ரயிலை நிறுத்தலாம்.