பீகார் மாநிலம் லக்கி சாராய் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு பெண் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணிடம் ஒருவர் பேச்சு கொடுத்த நிலையில் அவர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அவர் நம்பிக்கையாக பேசியதால் அந்த பெண் அவரை நம்பி அவர் சொன்ன இடத்தில் இறங்கினார். அவர்கள் இருவரும் இளைஞர்கள் பின்னர் அந்த நபர் தன்னுடைய நண்பர்கள் சிலருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்தார். பின்னர் ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அந்த பெண்ணை 8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து 100 ரூபாய் பணத்தை கொடுத்து அங்கிருந்து செல்லுமாறு கூறிவிட்டனர். அந்தப் பெண் காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகார் கொடுத்த நிலையில் பின்னர் அந்த பெண்ணை போலீசார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.