
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்ரீ ராமன் என்பவர் ரயில் படிக்கட்டில் அமர்ந்தவாறு பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்ரீ ராமன் வெளியே தூக்கி வீசப்பட்டார். இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் செல்போன் சிக்னல் மூலம் ஸ்ரீராமன் கீழே விழுந்த இடத்தை ரயில்வே போலீசார் கண்டறிந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஸ்ரீ ராமனின் தலையின் மூன்று இடங்களில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு ஸ்ரீ ராமன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.