
நியூயார்க் சுரங்கப்பாதை ரயில் பெட்டியில் ஒருவர் பெண்ணை தீ வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் லைட்டரை பயன்படுத்தி அந்த பெண்ணின் ஆடைகளை பற்ற வைத்துள்ளார். மேலும் தீ வைத்து விட்டு அங்கிருந்து செல்லாமல் அந்த பெண் இறக்கும் வரை அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் குவாத்தமாலாவில் இருந்து குடியேறியவர் என்றும், அந்த பெண்ணுக்கும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெண்ணுக்கு தீ வைத்த நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.