கேரள மாநிலத்தில் மரத்திகா அலிகான் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த வாரம் மல்லபுரம் பகுதியில் இருந்து டெல்லிக்கு செல்லும் எர்ணாகுளம் விரைவு ரயிலில் சென்றுள்ளார். அப்போது இரவு உணவை முடித்துவிட்டு அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட கீழ் படுக்கையில் தூங்கினார்.‌ அந்த சமயத்தில் மேல் இருந்த மிடில் பெர்த் எதிர்பாராத விதமாக அலிகான் மீது விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.

இந்நிலையில் அலிகானின் இறப்பிற்கு ரயில்வே நிர்வாகம் தான் பொறுப்பு என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வந்த லையில் அலிகான் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தற்போது ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் கூறியதாவது, விபத்து நடைபெற்ற ஸ்லீப்பர் கோச்சின் மிடில் பெர்த்தில் எந்த பழுதும் கிடையாது. மிடில் பெர்த்தில் இருந்த பயணி சீட் செயினை சரியாக இணைக்காமல் விட்டதால்தான் விபத்து நடந்துள்ளது. அதாவது மிடில் பெர்த்தில் இருந்த பயணி டிக்கெட் அப்கிரேடு ஆனதால் ஏசி கோச்சுக்கு அவசரமாக மாறினார். அப்போது அவர் சீட்டின் செயினை சரியாக பொருத்தாமல் அவசரமாக இறங்கி சென்றுள்ளார். இதனால்தான் விபத்து நடந்துள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் விபத்து நடந்த பிறகு சம்பந்தப்பட்ட சீட்டினை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் எந்த பழுதும் இல்லை என்பது தெரிய வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.