இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் ரயிலில் பயணிக்கும் போது சில ரயில்வே விதிகளை பயணிகள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதன்படி ரயில்வே விதியில் குறிப்பிட்ட சிலர் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் யார் என்று தெரியுமா? ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறார்கள் டிக்கெட் இல்லாமல் அனைத்து வகுப்புகளிலும் உறவினர்களுடன் பயணிக்கலாம். புற்றுநோயாளிகள், உதவியாளர் ஆகியோர் இரண்டாம் வகுப்பு படுக்கை மற்றும் ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டியில் இலவசமாக பயணிக்கலாம். பிற ஏசி வகுப்பு பெட்டிகளில் 75 சதவீதம் கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.