தெலுங்கானா மாநிலம் நந்தங்கி ரயில் நிலையத்தில் பழங்குடியின பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது திடீரென சரக்கு ரயில் வந்ததால் அந்த பெண் தண்டவாளத்தில் விழுந்து விட்டார். ஆனால் அந்தப் பெண் ரயில் செல்லும் வரை எந்த ஒரு அசைவும் இல்லாமல் ரயிலின் அடியில் படுத்துக்கொண்டார்.

இதனால் அவர் எந்த காயமும் இன்றி தப்பிவிட்டார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது. ஆபத்தான சூழ்நிலையிலும் அந்தப் பெண் பயம் இல்லாமல் சரியாக சிந்தித்து செயல்பட்டது தான் அவரது உயிரை இன்று காப்பாற்றி உள்ளது என்று கூறலாம்.