உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஒரு சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு பெண் நின்று கொண்டிருந்த ரயிலின் அடியில் குனிந்து தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த ரயில் தண்டவாளத்தை 2 பெண்கள் கடக்க முயன்ற நிலையில் ஒரு பெண் அடியில் படுத்து இருந்த நிலையில் திடீரென ரயில் நகர்ந்தது.

இதனால் அந்த பெண் தண்டவாளத்தில் படுத்து கொண்ட நிலையில் அங்கிருந்தவர்கள் ரயிலை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். ஆனால் பொது மக்களின் கூச்சல் சத்தம் ஓட்டுநருக்கு கேட்காததால் ரயில் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.