
இந்திய ரயில்வேயில் சுமார் 900 டெக்னீசியன் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த மாதமே வெளியாகும் என தெரிகிறது. விண்ணப்பதாரர்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அக்டோபர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆவண சரிபார்ப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.