
சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஒரு 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை முடிந்து கடற்கரையிலிருந்து மின்சார ரயிலில் திருவொற்றியூர் பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் அவர் ரயில்வே நிலையத்தில் இருந்து இறங்கி நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒரு வாலிபர் அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
உடனடியாக அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டதால் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அந்த பெண்ணை மீட்டனர். அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.