இந்திய ரயில்வே கோச்சில் சுற்றித்திரிந்த சிறுவன் ரயில் சீட்டை கழித்து அதன் கவரை ஓடும் ரயிலுக்கு வெளியே வீசிய வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த சிறுவன் ரீல்ஸ் எடுப்பதற்காக ரயில் சீட்டை கிழித்து அதன் கவரை வீசியதாக பலர் கருத்து தெரிவித்தனர்.

அந்த வீடியோவை பார்த்த சிலர் அது ஒரு பொறுப்பற்ற செயல் என விமர்சனம் செய்தனர். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை.  சிறுவன் பொது சொத்தை சேதப்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய ரயில்வே துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக பதில் அளிக்கவில்லை.