சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூருக்கும் வரும் மார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கும் தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து ரயில் புறப்பட்டு சேலத்திற்கு வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று காலை 6.35 மணி அளவில் டவுன் ரயில் நிலையத்தை கடந்து சத்திரம் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காயங்களுடன் மயங்கிய நிலையில் கடந்தார்.

இதனைப் பார்த்த ரயில் என்ற டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார். அந்தப் பெண் மயங்கி கிடந்த இடத்திற்கு 20 அடிக்கு முன்பு ரயில் நிறுத்தப்பட்டதால் அந்த பெண் உயிர் தப்பினார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. அந்தப் பகுதியில் சுற்றித் தெரியும் அவர் தண்டவாளத்தை கடந்த போது தடுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.