இந்தியாவில் நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.

இந்த நிலையில் முன்பதிவு செய்து ரயிலில் பயணிக்கும் நபர் தாம் இறங்க வேண்டிய இடத்துக்கு பதிலாக சிறிது தூரம் தள்ளி இருக்கும் வேறு இடத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்  அதற்காக ரயில்வேயில் தனி விதி உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் டிடிஆர்ஐ அணுகி பயண தூரத்தை நீட்டித்து தர கோரலாம். அதனை ஏற்று ரயிலில் காலியாக இருக்கும் சீட்டுக்கான டிக்கெட்டை டி டி ஆர் தருவார். அதை பெற்று அதே ரயிலில் பயணி தொடர்ந்து பயணிக்கலாம்.