சென்னை – ரேணிகுண்டா , அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக குரூப் ஏ மற்றும் குரூப் பி வழித்தடம் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் ஏ வழித்தடத்தில் அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வரையும் குரூப் டி வழித்தடத்தில் 13 கிலோமீட்டர் வரையும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். அதன்படி சென்னை – ரேணிகுண்டா, அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை வழித்தடத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்வதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வேகம் 1330 மீட்டராக அதிகரிக்கப்படும்.

அதனைப் போலவே சென்னை மற்றும் கூடூர் வழித்தடத்தில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, ஈரோடு மற்றும் திருச்சி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் இதில் அடங்கும். இவ்வாறு பல வழித்தடங்களில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.