இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தினந்தோறும் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் சௌகரியமாக குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதி இல்லாமல் பயணம் செய்வதற்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள் பயணம் செய்வது தொடர் கதையாகி வரும் நிலையில் அண்மையில் முன்பதிவு செய்த பயணிகள் அதிகப்படியான கூட்டத்தால் ரயிலை தவறவிட்ட சம்பவமும் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் இந்த புதிய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.