ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்து புது கிராமம் பகுதியில் பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக டிஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் போலீசாரை பார்த்ததும் சிலர் அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது. இருப்பினும் போலீசார் அவர்களைச சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கோவில்பட்டியை சேர்ந்த ராஜசேகர பாண்டி, கருப்பசாமி மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

அவர்கள் உயர் ரக கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்து ரயில் மெதுவாக சொல்லும் நேரத்தில் கீழே உருட்டி விடுவதும், அங்கு ஏற்கனவே காத்திருக்கும் நபர் அதை கைப்பற்றி மோட்டார் சைக்கிள் மூலம் புது கிராமம் பகுதியில் இருக்கும் சுடுகாட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 11 கிலோ கஞ்சாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முக்கிய புள்ளியான அருண்குமார் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.