
தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான ரவி மோகன் தனது 34 ஆவது படத்தில் நடித்து வருகிறார். டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கும் இந்த படத்திற்கு கராத்தே பாபு என பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தின் டிஜிபி சங்கர் ஜிவால் மகள் தவ்தி ஜீவால் கராத்தே பாபு படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். அரசியல் கதை களத்தில் இந்த படம் உருவாகுவது குறிப்பிடத்தக்கது.