பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அமைச்சர் ரகுபதியை விளாசினார். இது பற்றி அவர் பேசியதாவது, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி என்ன பேட்ட ரவுடியா.? ரவுடிகள் பேசும் அதே மொழியில் தான் ரகுபதி பேசுகிறார். திமுகவினர் தான் வேலூர் பாஜக நிர்வாகி விட்டல் குமாரை கொலை செய்தது. பாஜக திமுகவை எதிர்த்து அரசியல் கூட்டங்கள் நடத்தும் போது அதற்கு அனுமதி கிடைப்பதில்லை. நீங்க தீவிரவாதிகள் ஊர்வலத்திற்கு எல்லாம் அனுமதி கொடுக்கப்படுகிறது. நாங்கள் இஸ்லாம் மதத்தை எதிர்க்கவில்லை.

தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவதை மட்டும் தான் எதிர்க்கிறோம். முதல்வரை தமிழக மக்கள் நாற்காலியில் இருந்து அகற்ற ரெடியாகிவிட்டனர். அவருடைய ‌கண்ணுக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் லஞ்சம் போன்றவைகள் தெரியாது. மத்திய அரசு என்ன கொண்டு வந்தாலும் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றார். மேலும் முன்னதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தபோது பாஜகவினர்தான் ரவுடிகளை தங்களுடைய கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்கள் என்றார். அவர்கள் சமூகவிரோதிகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்களை கட்சியில் சேர்த்துள்ள நிலையில் இதை பலமுறை நாங்கள் நிரூபித்துள்ளோம். மேலும் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் பாரபட்சம் பார்க்க முடியாது என்று கூறினார்.