
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் உக்கரைன் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் “உக்ரைன் நடத்திய 12 தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டது. மேலும் 450 உக்ரைன் வீரர்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்கு சொந்தமான இரண்டு பீரங்கிகள் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.