அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சாங்லாங் என்ற மாவட்டத்தில் உள்ள ஜவகர் நவோதயா வித்யாலயாவில் ராகிங்க் கொடுமை நடந்திருக்கிறது. அதாவது எட்டாம் வகுப்பு மாணவர்களை 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளார்கள் .இதில் பல மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய முதுகு உட்பட அனைத்து இடங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அதிர்ச்சி புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம் ராகிங்கில் ஈடுபட்ட ஐந்து மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது .மேலும் அவர்களை சஸ்பெண்ட் செய்யவும் முடிவு செய்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.