குஜராத்தில் மயூர் தர்பரா (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய உறவினருக்கு சொந்தமான ஒரு வைர பட்டறையில் கணினி ஆப்ரேட்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதாவது பைக்கில் செல்லும் போது திடீரென தான் மயக்கம் அடைந்ததாகவும் விழித்து பார்க்கும்போது தன்னுடைய இடது கையில் உள்ள 4 விரல்களை காணவில்லை எனவும் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் அவருடைய புகாரில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அவருக்கு வேலை செய்ய பிடிக்காததால் தன் விரல்களை தானே வெட்டியுள்ளார். பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் வேலை செய்ய பிடிக்காததால் ராஜினாமா செய்வதற்கு பதிலாக ஒருவர் தன் விரல்களை தானே வெட்டிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.