இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அதன்படி நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அவரை துணை பிரதமர் டெனிஸ் மேண்டொரோவ் வரவேற்றார்.

அப்போது ரஷ்ய நாட்டின் பாரம்பரிய வழக்கப்படி ராணுவ அணிவகுப்பு மரியாதை பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதோடு சிவப்பு கம்பளத்தில் வரவேற்பும் கொடுக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியும், துணை பிரதமரும் அங்கிருந்து காரில் ஒன்றாக ஹோட்டலுக்கு சென்றனர். மேலும் பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பின் மூலம் இந்தியாவுடனான நட்புறவுக்கு ரஷ்யா எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதை உணர முடிகிறது.