
திமுக அமைச்சர் கே என் நேருவின் தம்பி ராமஜெயம் 2012 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி நடை பயிற்சிக்கு சென்ற போது கடத்திக் கொல்லப்பட்டார். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த கொலையும் சமீபத்தில் சடலமாக மீட்கப்பட்ட நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரியாக இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ராம ஜெயத்தை கொலை செய்து எரிக்க முயன்றனர் எனவும் அதேபோல ஜெயக்குமாரை கொலை செய்து எடுத்துள்ளனர் எனவும் சந்தேகக்கப்படுகிறது. மேலும் இருவரும் ஒரே பாணியில் கை கால்கள் கட்டப்பட்டு இறந்து கிடந்தனர். இவற்றை வைத்து இரண்டு கொலைகளும் ஒரே கூலிப்படையினரால் நடந்திருக்கும் என சிறப்பு புலனாய்வு குழு சந்தேகிக்கின்றது.