அயோத்தியில் ராமர் கோவில் ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் தனது 30 ஆண்டு காலம் மௌன விரதத்தை ஒரு மூதாட்டி கலைக்க உள்ளார். 85 வயதான மூதாட்டி சரஸ்வதி தேவி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் வரை நான் மௌன விரதம் இருக்கப் போவதாக 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு நடந்த சமயத்தில் சபதம் எடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டில் மௌன விரதத்தை பகுதியாக முடித்துக் கொண்ட அந்த மூதாட்டி தினமும் மதியம் ஒரு மணி நேரம் மட்டும் பேசி வந்தார். ஆனால் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நாளிலிருந்து மீண்டும் மௌன விரதத்தை அவர் கடைபிடிக்க தொடங்கிய நிலையில் தற்போது ஜனவரி 2ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளதால் அந்த மூதாட்டி அங்கு சென்றுள்ளார்.