தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகைகள் சினேகா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய இடங்களில் நடித்துள்ள நிலையில் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த படம் நேற்று திரை அரங்குகளில் ரிலீசான நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு வெளியான நிலையில் படம் முழுவதும் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த படத்தின் முழு காட்சிகளும் இணையத்தில் வெளியாகி டெலிகிராம் செயலியில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இது பட குழுவினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.