
நேற்று சென்னை துறைமுகத்தில் கார் ஒன்று கடலில் விழுந்து ஓட்டுனர் மாயமாகியுள்ளார். துறைமுகத்தில் ஓட்டுனரான முஹம்மத் சஹி காரை பின்னோக்கி எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கடலில் கார் விழுந்தது. அப்போது காரில் இருந்த கடற்படை அதிகாரி சிறு காயங்களுடன் தப்பிவிட்டார்.
ஆனால் கார் ஓட்டுநர் மாயமாகிவிட்டார். ஓட்டுனரை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே எதிர்பாராத இருந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.