
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் போட்டியில் மிகவும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் ரிஷப் பண்ட். அவரை லக்னோ அணி நிர்வாகம் 27 கோடிக்கு வாங்கியது. ஆனால் மிகவும் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் இதுவரை எந்த போட்டியிலும் சரிவர விளையாடவில்லை.
இதனால் ரிஷப் மீது அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 22ஆம் தேதி லக்னோ அணியை டெல்லி சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ரிஷப் ஏழாவது இடத்தில் களமிறங்கினார். அவர் 2 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் பின் டக் அவுட் ஆனார். ஆனால் அவர் களமிறங்குவதற்கு முன்பாக அந்த அணியின் ஆலோசகர் ஜாகீர் கானுடன் மிகவும் கோபமாக ஆலோசனை செய்து கொண்டிருந்தார்.
அதாவது என்னை தாமதமாக இறங்க சொன்னதால் தற்போது நிலைமையை பார்த்தீர்களா என்று கேட்பது போல அவர் விவாதித்தது இருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் பேசியுள்ளார். அதாவது கண்டிப்பாக ரிஷப் ஏழாவது இடத்தில் களமிறங்கும் முடிவை எடுத்திருக்க மாட்டார்.
இந்த முடிவை சஞ்சீவ் கோயங்கா தான் எடுத்திருக்க வேண்டும். ஏனெனில் கோயங்கா போட்டியின் போது களத்திற்கு வந்து ராகுல் முதல் ரிஷப் வரை அனைவரையும் திட்டுவதை அனைவரும் அறிந்திருப்போம். கேப்டனை பெயருக்காக மட்டும் வைத்திருக்காமல் சுதந்திரமாக விளையாட விட வேண்டும். அப்போதுதான் ஜெயிக்க முடியும்.
அதன் பிறகு ரிஷப்பிடம் யாரோ ஏதோ சொன்னதால்தான் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அவர் மைதானத்தில் கோபமாக இருந்ததை அனைவரும் அறிவோம். இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரிஷப் மதிக்க கூடியவர். அவர் சரியான ஃபார்மில் இல்லாததால் ஏழாவது இடத்தில் விளையாட வைப்பது எந்த விதத்தில் நியாயம். மேலும் பெயருக்கு மட்டும் கேப்டனை வைத்திருந்தால் எப்படி ஜெயிக்க முடியும் என்று கூறினார்