ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று முக்கியமான செயல்கள் எளிமையாக முடியும். பணப்பரிவர்த்தனை சீராக அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களிடம் எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். இழிபரியாக இருந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

கவனமாக பேசுவதால் வீண்பகைகளை தவிர்க்கலாம். பெண்கள் எந்த காரியத்திலும் சிந்திக்காமல் ஈடுபட வேண்டாம். தீவிர முயற்சியால் வெற்றி பெற முடியும். பணி சுமை அதிகமாக இருக்கும். இன்று மாணவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். பாடங்களில் சந்தேகம் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

கல்வி பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை. இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பிங்க் நிறம்