ரிஷப ராசி அன்பர்களே,

இன்று மனதிற்குள் கருணை தன்மை அதிகரிக்கக்கூடும். நல்ல செயல்களை புரிந்து சமூகத்தில் வரவேற்பை பெறுவீர்கள். உபரி பண வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் சூழல் உள்ளது. வாழ்க்கை தரத்தை இன்று உயர்த்திக் கொள்வீர்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.

வெற்றிக்காக கடுமையாக உழைப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டிகள் ஏற்படும். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. மனநிறையுடன் காணப்படுவீர்கள். இன்று பெண்களுக்கு மன அழுத்தம் விலகிச் செல்லும்.

கடன் பிரச்சனை சரியாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி இருக்கும். இன்று மாணவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். கல்வி பற்றி புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: மூன்று ஆறு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்