ரிஷப ராசி அன்பர்களே,
இந்த நாள் அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம் நண்பர்கள் கேட்ட உதவியை பரிபூரணமாக செய்து கொடுப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் எல்லாம் மிகச் சிறப்பாக நடைபெறும். புரிதல் உணர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி பணி சிறப்பாக இருக்கும்.
இன்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கும். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். பெண்கள் இன்று குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். மனக்கவலை அடைய வேண்டாம்.
குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு கோவில் குளங்களுக்கு சென்று வர பாருங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் மூன்று
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்