இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது vodafone ஐடியா நிறுவனமும் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 11% முதல் 24 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

அதன்படி ப்ரீபெய்டு திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி (நாள்தோறும் 1.5ஜிபி டேட்டா) ரீசார்ஜ் இன் விலை 299 ரூபாயிலிருந்து 349 ரூபாய் ஆகவும், 365 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் விலை 2899 ரூபாய் இருந்து 3499 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 4 முதல் அமலுக்கு வருகிறது.