
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி சமீபத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இந்த நிலையில் வாய்ஸ் கால், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றுக்கு தனித்தனி ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்த TRAI உத்தேசித்துள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் நுகர்வோர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுள்ளது. தற்போது இவை அன்லிமிடெட் பிளான் என தொகுக்கப்பட்ட திட்டமாக வழங்கப்படுகிறது. இதனால் வாய்ஸ் கால் எஸ்எம்எஸ் மட்டுமே பயன்படுத்துவோர் டேட்டா பயன்படுத்தாவிட்டால் அதற்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளதாக புகார் கூறுகின்றனர்.