சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். ரீல்ஸ் மோகத்தால் வாலிபர்கள் அத்துமீரும் செயல்களில் ஈடுபடுகின்றனர். சிலர் டேல்ஸ் எடுக்கிறோம் என்ற பெயரில் ஆபத்திலும் சிக்கி கொள்கின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் நெசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கூலி வேலை பார்க்கிறார். இவரது மகன் குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இவர் பின்னணி பாடலுடன் பட்டா கத்தியை கையில் வைத்துக்கொண்டு ரிலீஸ் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது. இதுகுறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிந்து குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கெத்து காட்டுகிறோம் என்ற பெயரில் சிலர் ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரிலீஸ் வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர். அது சட்டப்படி குற்றமாகும். இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.