
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அதிக அளவில் இருக்கிறது. குறிப்பாக வயது வித்தியாசம் இன்றி அனைவரும் ரீல்ஸ் வீடியோ மீது அதிக அளவில் ஆர்வம் கொண்டுள்ளனர். இந்த ரீல்ஸ் மோகத்தினால் இளைஞர்கள் பல விபரீதமான செயல்களில் ஈடுபட்டு வீடியோக்கள் எடுக்கிறார்கள். இதனால் சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. அப்படிப்பட்ட செய்திகள் சமீப காலமாக வந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காதல் ஜோடி நடுரோட்டில் எடுத்த ரில்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராமர் என்ற வாலிபர் தன் காதலியுடன் பைக்கில் செல்லுமாறு ரீல்ஸ் எடுத்துள்ளார். அதாவது தன் காதலியை பைக் ஓட்டுமாறு கூறிய அவர் பெட்ரோல் டேங்க் முன்னாடி அமர்ந்துள்ளார். இவர்களிடம் லைசன்ஸ் இல்லாததோடு ஹெல்மெட் அணியவில்லை. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது காவல்துறையினர் அவர்களுக்கு ரூ.13,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.