
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ரீல்ஸ் வெளியிடுவதற்காக செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு 12ஆம் வகுப்பு மாணவி, மூதாட்டியை தாக்கி நகை பறித்துள்ளார்.
போதம்மாள் என்ற மூதாட்டியை தாக்கி அவரிடம் இருந்த 2.5 கிராம் நகையை பறித்துள்ள மாணவி, அந்த நகையை அடகு கடையில் ரூ.9,000-க்கு விற்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதிலேயே இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடும் மாணவிகளை எவ்வாறு திருத்தி அமைப்பது என்பது குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.