இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் இணையதளவாசிகள் இடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில் சில வீடியோக்கள் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தற்போது ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவம் வைரலாகி வருவதால் இணையதள வாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதாவது ஹைதராபாத்தில் உள்ள குக்கட்பள்ளி என்னும் பகுதியில் வாலிபர் ஒருவர் ரூ 50,000 ரூபாய் ரொக்க பணத்தை காற்றில் வீசுகிறார்.

அப்போது அந்த சாலையில் சென்று கொண்டிருந்த பலர் பணத்தை எடுப்பதற்காக கூடியதால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதோடு அந்த வாலிபர் வெளியிட்ட பதிவில் இதுபோன்ற தந்திரங்களை தொடர்ந்து செய்வேன் என்றும் இனிவரும் வீடியோக்களில் “நான் எவ்வளவு பணத்தை வீசப் போகிறேன்” என்று சொல்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

இவ்வாறு பணத்தை வீசி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு ட்ரெண்ட் ஆக இந்த வாலிபர் செய்துள்ள இந்த சம்பவம் மக்கள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலான நிலையில் இணையதள வாசிகள் அந்த வாலிபர் மீது கடமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர் . இதைத்தொடர்ந்து  தெலுங்கானா டிஜிபி போன்ற அதிகாரிகளை டேக் செய்து இதுபோன்ற ஆபத்தான செயல்முறைகளுக்கு எச்சரித்துள்ளனர் . மேலும் இணையதள வாசிகள் பொது மக்களுக்கு தொந்தரவு செய்யும் விதமாக பொது இடத்தில் இந்த வாலிபர் பணத்தை வீசியதை மிகவும் கண்டித்து கருத்து தெரிவித்தனர்.

“>