
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தஜிப் (18) என்ற இளைஞர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கல்வாரி பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இவருடைய நண்பர்கள் அனைவரும் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது தஜித் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் 100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் குதித்தார். இதை அவருடைய நண்பர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் நீரில் மூழ்கிய தஜிப் நீண்ட நேரமாக வெளியே வராததால் அவருடைய நண்பர்கள் தேடிப் பார்த்தனர்.
அப்போது ஆழத்தில் மூழ்கி தஜிப் இறந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தஜிப் உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ரீல்ஸ் மோகத்தால் 100 உயரத்திலிருந்து தண்ணீரில் குதித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.