
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொட்ட பள்ளபுரா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிகேஷ் (20), ராகுல் (18), லலன் (24) ஆகிய வாலிபர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து வழக்கம் போல் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர்கள் தண்டவாளத்தின் அருகே நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்தனர்.
அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் வாலிபர்கள் மீது மோதியது. இதில் மூன்று வாலிபர்களும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ரீல்ஸ் மோகம் என்பது இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து விட்ட நிலையில் இதனால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்கள் குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது