80 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகர்கள் கூட ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது கிடையாது. இவ்வளவு பெரிய தொகை ஒன்றை சம்பளமாக பெறுவது என்பது அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய விஷயம். ஆனாலும் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி சாதனை படைத்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. உலகப் புகழ்பெற்ற இந்திய நடிகையான ஸ்ரீதேவி தான் முதன் முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியவர். தன்னுடைய  அழகாலும், திறமையாலும், நடிப்பாலும் மக்களை கவர்ந்த இவர் பல கோடி ரசிகர்களையும் சம்பாதித்து வைத்துள்ளார்.

ஒரு கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகை என்ற பெருமை பெற்றது மட்டுமல்லாமல் சக நடிகர்களை விட அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்ற பெருமையும் இவரையே சேரும். இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பாலிவுட், கோலிவுட், டோலிவுட்  என இந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்தார் . அமிதாப்பச்சன், ரஜினி, கமல், சிரஞ்சீவி என முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.  இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மரணம் அடைந்தார்.