
தனக்கு வரப்போகும் கணவர் நல்லவனாக இருக்க வேண்டும் என நினைத்தது ஒரு காலம். ஆனால் இன்று பல பெண்கள் வரப்போகும் கணவர் லட்சங்களில் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றனர். அந்த வகையில் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்கும் மணமகன் தேவை என்று கூறிய வாட்ஸப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நன்கு படித்த மும்பையில் சொந்த வீட்டில் வசிக்கக்கூடிய ஒரு நபர் தனக்கு மணமகனாக வேண்டும் என்று அவர் கூறியுள்ள நிலையில் அந்த பதிவு வைரலாகி வருகிறது.
Expectation of groom by a 37 year old female earning 4,00,000 per year, translated from Marathi. This is next level delusion. pic.twitter.com/0ohyDboqpd
— Ambar (@Ambar_SIFF_MRA) April 2, 2024