
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இந்நிலையில் நடிகர் விஜயை தற்போது மகாராஜா பட குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். அதாவது நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மகாராஜா. இந்த படம் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றி பேசியுள்ளது.

இந்த படமானது 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நிதிலன் சாமிநாதன் உட்பட படக்குழுவினர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.