
பிரபல இயக்குனர் ஹனீப் அடேனி மார்க்கோ திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தில் உன்னி முகுந்தன் நடித்திருந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கொடூரமான கொலை காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் போன்றவை இடம் பெற்றிருந்தது. இந்த படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் தணிக்கை வாரியமும் ஏ சான்றிதழ் வழங்கியிருந்தது.
ஆனால் தற்போது இந்த படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை செய்துள்ளனர். இதன் காரணமாக ஓடிடி உரிமையும் ரத்தாகுமோ? என படக் குழுவினர் அச்சத்தில் இருக்கிறார்கள். இதனால் படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகமது மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது, “இந்தப் படம் வன்முறைக்கு ஆதரவளிக்கும் படம் கிடையாது. இதுபோன்று ஏற்கனவே பல படங்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த படத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்று தெரியவில்லை. மேலும் இது போன்ற படங்களை நான் ஒருபோதும் தயாரிக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.