தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது இதற்கான விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் உரிமை தொகைக்கு விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரிபார்க்க கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

தகுதியானவர்களின் இறுதி பட்டியலை இன்றுக்குள் தயார் செய்ய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நிராகரிக்கப்பட்டதாக செல்போனுக்கு மெசேஜ் வந்தாலும் விண்ணப்பதாரர்கள் இது குறித்து மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து தீர்வு பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.