தமிழகத்தில் மாதந்தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விண்ணப்ப பதிவு பணிகளை ரேஷன் கடை ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

இதில் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 75 லட்சம் விண்ணப்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தில் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்த பெண்களின் விவரங்களை சரிபார்க்கும் பணி வருகின்ற ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ஒரு மாத காலமே உள்ள நிலையில் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.