
தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் குடும்ப தலைவியின் மொபைல் எண்ணுக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.
எனவே விண்ணப்பத்தை குடும்ப தலைவிகள் ஒப்படைத்த பிறகு தமிழக அரசு சார்பாக ஏதாவது குறுஞ்செய்தி வந்துள்ளதா என்று அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒருவேளை ஆயிரம் ரூபாய் உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அடுத்த 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அப்படி மேல்முறையீடு செய்தால் அதிகாரிகள் வீட்டிற்கு நேரில் வந்து கள ஆய்வு மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது