
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதில் வங்கி கணக்கு இல்லாத குடும்ப தலைவிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் அடிப்படை வங்கி சேவைகளை அணுக முடியாத குறைவான வருவாய் பிரிவினருக்கு ரூபே டெபிட் கார்டு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது