
தமிழக வெற்றி கழகத்தின் முதல் குழு கூட்டத்தின் போது ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜய் ஆயிரம் கோடி வருமானத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வந்துள்ளார் என்று கூறினார். இது தற்போது விஜய்க்கு சிக்கலாக மாறி உள்ளது. அதாவது ஆயிரம் கோடி வருமானம் வந்தால் வருடத்திற்கு 300 கோடி வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால் விஜய் 80 கோடி மட்டும்தான் வருமான வரி செலுத்தியுள்ளதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, அவர்களே சொல்கிறார்கள் ஆயிரம் கூடி வருமானத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வந்துள்ளோம் என்று. ஆயிரம் கோடி வருமானம் என்றால் 300 கோடி வரி செலுத்த வேண்டும்.
ஆனால் அவர் வெறும் 80 கோடி மட்டும் தான் வரி செலுத்துகிறார். எனவே மீதமுள்ள 220 கோடிக்காக மத்திய அரசின் வருமான வரித்துறை விஜய் வீட்டில் சோதனை நடத்துமா.? ஒருவேளை அப்படி சோதனை நடத்தினால் விஜய் தனியாகத்தான் கட்சி தொடங்கியுள்ளார் ஒன்றிய பாஜக அரசு சொல்லி தொடங்கவில்லை என்று மக்களும் நாங்களும் நம்புவோம். அப்படி இல்லையெனில் ஒன்றிய பாஜக அரசு சொல்லி தான் விஜய் கட்சி தொடங்கியுள்ளார் என்று அர்த்தம். மேலும் திடீரென விஜய் கட்சி வெற்றி பெற அந்த கட்சியின் பொதுச் செயலாளர் முதல்வர் என்று அறிவித்து விட்டால் நாம் எல்லோரும் என்ன செய்ய முடியும் என்று கூறினார்.