
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்த 57 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு உரிய காரணத்துடன் கூடிய எஸ் எம் எஸ் அவர்களின் மொபைல் எண்ணுக்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் அதிக அளவிலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்த எஸ்எம்எஸ் இன்னும் பலருக்கும் வந்து சேரவில்லை. எனவே விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள அரசு 9952951131 என்ற தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இந்த மொபைல் எண்ணை உங்களது ஃபோனில் பதிவு செய்து whatsapp மூலமாக Hi என்று டைப் செய்து அனுப்ப வேண்டும் எனவும் உங்களது ஸ்மார்ட் கார்டு நம்பரை பதிவு செய்து அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்தவுடன் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் அல்லது விண்ணப்பம் தகுதி பெற்றுள்ளதா என்பது குறித்த தகவல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனைத் தொடர்ந்து சரியான காரணமாக இருந்தால் உடனே உங்கள் அருகில் உள்ள இ சேவை மையம் மூலமாக 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது.