இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே தாங்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தில் ஒரு குறிப்பிட்ட பணத்தை சேமிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். நிம்மதியான எதிர்காலத்திற்கும் வயதான பிறகு யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் வாழவும் சேமிப்பு என்பது அவசியம். அவ்வாறு சேமிக்க விரும்புபவர்களுக்காக ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதில் தபால் அலுவலகத் திட்டத்தில் இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் குறைந்த முதலீட்டில் சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம். புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

போஸ்ட் ஆபீஸ் ஃபிக்ஸட் டெபாசிட் அரசாங்க திட்டம் என்பதால் முதலீடு செய்யப்படும் தொகை பாதுகாப்பானதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு சிறந்த வட்டியும் வழங்கப்படும். தற்போது வருடத்திற்கு 6.9% வட்டி விகிதமும், 2 வருட முதலீட்டுக்கு ஏழு சதவீதமும், மூன்று ஆண்டுகளுக்கு 7.1 சதவீதமும், ஐந்து வருட டெபாசிட்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் ஒருவர் ஒரு முறை 6 லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் போது ஐந்து வருடம் முதலீட்டுக்கு 7.5% வட்டி விகிதத்தில் 2,69,969 ரூபாய் தொகை வருமானமாக கிடைக்கும்.

இதன் மூலம் அசல் தொகையுடன் சேர்த்து மொத்தமாக 8,69,969 மெச்சூரிட்டி தொகையாக முதலீட்டாளர்கள் பெறலாம். முதலீடு செய்யப்படும் தொகையை பொறுத்து ரிட்டன் கிடைக்கும். போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அடிக்கடி வட்டி விகிதங்கள் மாற்றப்படும். அசல் தொகையுடன் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் கணக்கில் வட்டி சேர்க்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தபால் நிலையங்களில் ஆயிரம் ரூபாய் செலுத்தி பிக்சட் டெபாசிட் கணக்கு தொடங்கலாம்.